அமைச்சரின் கூட்டத்திற்கு வருகை தராத சமுர்த்தி அபி. உத்தியோகத்தர்கள்! நியாயமான விளக்கத்தை கோரிய டக்ளஸ்

அமைச்சரின் கூட்டத்திற்கு வருகை தராத சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் நியாயமான விளக்கத்தை தருமாறு அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிலர், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலிற்கு சமூகமளித்திருக்கவில்லை. இந்த நிலையிலேயே அவர் இவ்வாறு அதிகாரிகளிற்கு பணித்துள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இன்று நான் உதவி ஆணையாளர் மற்றும் சிரேஸ்ட முகாமையாளர் ஆகியோரிடம் நான் ஒரு விடயத்தை கேட்கின்றேன்.

இன்றைய வரவுகளை நான் பார்வையிட்டிருந்தேன். இதில் அனைவரும் வருகை தந்ததாக தெரியவில்லை. அதற்கான விளக்கம் எனக்குத் தேவை.

இன்றைய கலந்துரையாடலுக்கான அழைப்புக்கு அவர்கள் ஏன் வருகை தரவில்லை என்ற விளக்கம் எனக்க தேவைப்படுகின்றது.

எனது அடுத்த வருகைக்கு முன்னர் அதற்கான விளக்கத்தினை கேட்டு எனக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்த வாரமளவில் தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடல் மேற்கொள்வேன். அன்றைய தினம் குறித்த கோவைகளை எடுத்த செல்வேன்.

அதன்போது நீங்கள் வருகை தராதவர்களுடைய விளக்கத்தினை வழங்க வேண்டும். எனக்க பழிவாங்கும் எண்ணம் இல்லை. இருந்தாலும் வீம்பு பண்ணினால் நான் அவர்களை இடம் மாற்ற வேண்டி வரும்.

இந்த கடமைக்கு எனக்கு ஒத்துழைப்பு வேண்டும். அதனை ஒழுங்குபடுத்ததாதது உங்களுடைய தவறுகள்.

இரண்டு வாரங்களிற்கு முன்னர் இவ்வாறு ஆட்களை சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.

இதற்கு முன்னரும் நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. சாட்டுபோக்குகள் எல்லாம் சொல்லப்பட்டது.

இனியொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் என இருந்தேன். ஆனால் இந்த தடவை ஏன் அவர்கள் வரவில்லை என்ற நியாயமான காரணங்கள் எனக்கு தரப்பட வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply