எழுதுமட்டுவாழில் வன்முறைக்கும்பல் வெறியாட்டம்: உடைமைகளுக்கு சேதம்!

தென்மராட்சி, எழுதுமட்டுவாழில் வன்முறைக் கும்பலால் தாக்குதல் சம்பவமொன்று இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள் மற்றும் கோடரிகளால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பல இலட்சம் ரூபா பெறுமதியான உடைமைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஏழு பேரை வீட்டின் உரிமையாளர் அடையாளம் காண்பித்துள்ளார்.

இக் கும்பல் பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களைக் கைது செய்ய பளைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Leave a Reply