இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் கடந்த மாதம் 21 ஆம் திகதி நாரஹேன்பிட்டி நைன்வேல்ஸ் வைத்தியசாலையில் பிறந்த ஆறு குழந்தைகள் சுமார் ஒரு மாத காலத்தின்பின் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்கள்.
மகப்பேறு மருத்துவர் பேராசிரியர் டிரன் டயஸால் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் மூலம் பிறந்த மூன்று பெண் பிள்ளைகளும், மூன்று ஆண் பிள்ளைகள், 31 வயதான தாயும் சிகிச்சை முடிந்து வெளியேறினர்.
இதன்போது, வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அன்பான கவனிப்பில் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குழந்தைகளுக்கான சிறு பிரியாவிடை நிகழ்வும் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், சிரந்தி ராஜபக்ச மற்றும் பல அனுசரணையாளர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தேவையான பல்வேறு பொருட்களை வழங்கினார்கள்.







