ஹோட்டல் அறையொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்

அனுராதபுரம்- ராமக்கெலே, வலவிவத்த பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றின் அறைக்குள் இருந்து, ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், நேற்று (20) மீட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திஸ்வெல்ல கிரிந்திவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதுத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply