வலி.கிழக்குப் பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளருக்கு மல்லாகம் நீதிமன்றம் அழைப்புக் கட்டளை!

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஸ் மற்றும் உப தவிசாளர் கபிலன் ஆகியோரை நாளை திங்கட்கிழமை காலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இந்தக் கட்டளை அச்சுவேலி பொலிஸாரால் தவிசாளர் மற்றும் உப தவிசாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினம் தொடர்பில் நீதிமன்றங்களால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், மாவீரர் தினம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டே இந்த அழைப்புக்கட்டளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினம், தியாகி திலிபன் நினைவு தினம் மற்றும் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கில் பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தலை முன்னெடுக்க மட்டக்களப்பில் ஏழு பேருக்குத் தடை!

Leave a Reply