குடும்பத் தகராறு மனைவி உயிரிழப்பு!

தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற குடும்பப் பெண் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது கணவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்கம் அல்வாய் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரமநாதன் சசிகலா (வயது – 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

‘கடந்த 13ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மனைவி மண்ணெண்ணையை தன் மீது ஊற்றியுள்ளார். தகராற்றில் ஈடுபட்டால் தீ மூட்டப்போவதாக அவர் மிரட்டியுள்ளார். இதன்போது கணவர் லைற்றரால் மனைவியின் பாவாடைக்கு தீ வைத்துள்ளார். இதனால் தீயில் எரிந்த அவரை அயலவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் நேற்று உயிரிழந்துள்ளார்’ என்று விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply