மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள மெஹ்ரோனில் வசிப்பவர் நித்யானந்த் திவாரி (75). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
அதுமட்டுமின்றி சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வயிற்று வலியும் ஆண்குறியில் கடுமையான வலி.
இதனால் தினமும் சிறுநீர் கழிக்க நித்யானந்த் திவாரிக்கு நரக வேதனை ஏற்பட்டது. இதற்கு பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை.
சம்பவத்தன்று வழக்கம் போல் சிறுநீர் கழிக்கும் போது கடும் வலி ஏற்பட்டது. உடனே வீட்டுக்குள் சென்ற திவாரி, அங்கிருந்து கோடாரியை எடுத்து அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்தார்.
இதையடுத்து, கடும் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பை மீண்டும் இணைக்க முடியாது என தெரிவித்தனர்.