நலன்புரி உதவித்தொகை பெற வேண்டிய மக்களுக்கு கியூ.ஆர் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என சமூக நலன்புரி பிரதிகூலங்கள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நலன்புரி மானியப் பலன்களை வழங்குவதற்குத் தகுதியானவர்களைக் கண்டறியும் புதிய வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதார உதவித் திட்டம் போன்ற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் மக்கள் மற்றும் அந்த உதவித்தொகைகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அரசின் நலன்களை எதிர்பார்க்கும் மக்களும் இந்த திட்டத்தின் இலக்காகும்.
அதன்படி, 3.9 மில்லியன் குடும்பங்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் 6 அடிப்படை நடவடிக்கைகளின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்