கொழும்பு, செப். 6: ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால், ஒரு இறாத்தல் பாணின் விலையை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பாண் விற்பனையில் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், நாட்டின் பலவேறு இடங்களில் பல்வேறு விலைகளில் பாண் விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் மீன் விலை 50 சதவீதத்தால் குறையும் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும், வரும் நாட்களில் மீனின் விலை குறையும் என சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்தார்.