இலங்கை ராமஞ்ஞ பீடத்தின் அனுநாயக்கரும், கண்டி கெட்டம்பே ரஜோபவனாராம விகாரையின் விகாராதிபதியுமான கப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் தனது 95ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
சிரேஷ்ட பௌத்த மதகுருவான சிறிவிமல தேரர் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பௌத்த மதத் துறையில் முக்கிய பங்காற்றிய இவர், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக கெட்டம்பே ராஜோபவனாராமய விகாரையின் விகாராதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
பௌத்த சமய வளர்ச்சிக்கும் மதப் பணிகளுக்கும் நீண்டகாலமாகப் பங்களிப்புச் செய்த இவர், பௌத்த மதகுருமார்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்கினார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





