ராஜபக்ச ஆட்சியின் செயற்பாடுகளே நாட்டில் பாரிய நெருக்கடி நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்கள் மாத்திரமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகள், அவர்களது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுமே நிலவும் நெருக்கடிகளுக்குக் காரணம் என்று சந்திரிக்கா குமாரதுங்க நிகழ்வு ஒன்றின்போது குற்றம் சுமத்தியுள்ளார்.
2005 ஆம் ஆண்டின் பின்னர் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி, ராஜபக்சவினர் இந்த நாட்டையும் அதன் சொத்துக்களையும் தமக்கு சொந்தம் என நினைத்தனர்.
அவர்கள் தாம் விரும்பும் விதத்தில் செயல்பட முடியும் என்றும், அவர்கள் செய்யும் ஒவ்வொரு மோசமான வேலையிலிருந்தும் தப்பித்துவிடலாம் என்றும் அவர்கள் நினைத்தார்கள் என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமது ஆட்சியின் நடவடிக்கைக்கு எதிராக யாராவது ஆட்சேபனை தெரிவித்தால், அவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் சந்திரிக்கா சுட்டிக்காட்டினார்.
பிற செய்திகள்