மல்வான வல்கம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவர் நீராடியதனை இரகசியமாக வீடியோ எடுத்த 37 வயதான ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி குளிப்பதற்கு குளியலறைக்குச் சென்றபோது, சந்தேக நபர் குளியலறையின் ஜன்னல் மூலம் தனது கைத்தொலைபேசியில் அவரை வீடியோ எடுத்துள்ளார்.
சம்பவத்தை கண்ணுற்ற சிறுமியின் உறவினர் ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கையடக்க தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பிற செய்திகள்