முல்லைத்தீவில் ஞானசார தேரரை வரவேற்கும் துண்டுப்பிரசுரங்கள்!

ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் வடக்கிற்கான பயணம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வவுனியாவில் இச் செயலணி தொடர்பான கருத்தறியும் கூட்டம் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பங்குபற்றுதலுடன் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாளை முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இச் செயலணி பயணங்களை மேற்கொண்டு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளது.

இந் நிலையில், பொதுபலசேன ஞானசாரதேரர் அவர்களை வன்னித்தமிழ் இளைஞர் கழகம் வரவேற்கின்றோம் என்ற துண்டுப்பிரசுரங்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தின் வீதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் கடமையில் நிற்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் புதிய டெல்டா வைரஸ் திரிபு பரவும் அபாயம்! சன்ன ஜயசுமன

Leave a Reply