வடக்கு மாகாணத்தில், பிறந்து 10 நாட்களேயான பச்சிளங்குழந்தை உட்பட 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 212 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாம் காணப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள பிறந்து 10 நாட்களேயான பெண் குழந்தை உட்பட 04 பேர், மன்னாரில் 04 பேர், முல்லைத்தீவில் 04 பேர், கிளிநொச்சியில் ஒருவர், யாழில் ஒருவர் என தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.






