சற்றுமுன் ஆரம்பமான இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு

இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது.

குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் ஆரம்பமாகியுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார முதலாவதாக இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தார். 

  1. ஜகத் புஷ்ப குமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
  2. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்
  3. லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
  4. திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
  5. கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்
  6. ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
  7. மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்
  8. தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
  9. ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
  10. லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
  11. சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
  12. இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
  13. சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
  14. சாந்த பண்டார – ஊடக இராஜாங்க அமைச்சர்
  15. விஜித பேருகொட – பிரிவெனா கல்வி இராஜாங்க அமைச்சர்
  16. அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
  17. சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
  18. பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்
  19. அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்
  20. சிவநேசதுறை சந்திரகாந்தன் – கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

Leave a Reply