பேருந்து மீது உருண்டு விழுந்த கற்பாறை -பயணிக்கு நேர்ந்த விபரீதம்

ஹட்டன் – கொழும்பு பேருந்து மீது கற்பாறை சரிந்து விழுந்து பயணி பலி!

ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கற்பாறை உருண்டு விழுந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அகரபத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய முத்தன் சுதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று (28) பிற்பகல் 2.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, கலுகல பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply