துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வ அஞ்சலி.

துணுக்காய் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தந்தையான நீ. அந்தோனிப்பிள்ளை அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மாவீரர்நாள் நினைவேந்தல் செயற்பாடுகள் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் பெருந்திரளான மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.

Leave a Reply