நேற்று மட்டக்களப்பில் களைகட்டிய சர்வதேச ஆண்கள் தின நிகழ்வு
(வி.ரி. சகாதேவராஜா)
சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் “மன அழுத்தம் இல்லாத வேலைத்தளமும் ஆரோக்கியமான மனமும் ஒவ்வொரு ஆணின் உரிமை” எனும் தொனிப்பொருளில் நேற்று (28)சனிக்கிழமை பாரிய நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
மட்டக்களப்பிலிருந்து இயங்கி வரும் உலக நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு உயர் ஆணையர் ஏ. கங்காதரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், ஓய்வுநிலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ், சிவஸ்ரீ சிவகுகநாத ஐயர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா, ஓய்வுநிலை அதிபர் சா. மதிசுதன், கதிரவன் த. இன்பராசா, உலக நண்பர்கள் அமைப்பின் செயற்றிட்ட பணிப்பாளர் சாந்தகுமார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
ஊடகம், கல்வி, கலை, விவசாயம் என பல துறைகளில் சேவையாற்றி வரும் 10 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், இணைப்பாளர் வ.சக்திவேல் ஏற்பாட்டில், “ஆண்களின் மனநலம் மற்றும் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படுவது வீட்டிலா? பணியிடத்திலா?” எனும் தொனிப்பொருளில் கதிரவன் இன்ப ராசா குழுவினரின் கலகலப்பான பட்டிமன்றமும் இடம்பெற்றது.










