ஆயர்களின் முடிவு தேவையில்லாதது: இந்து வெறியர் கருத்து அருவருப்பானது! சிறீகாந்தா தெரிவிப்பு

ஆயர்கள் நினைவேந்தல் தொடர்பாக சொன்ன கருத்துக்கள் தொடர்பில் இந்து மத வெறியர்களின் கருத்துகள் அருவருக்கத்தக்கது. தமிழ் மக்களிடம் மத பேதங்கள் இருக்க கூடாது. ஆயர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்க தேவையில்லை என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், ஆயர்களின் கருத்தை சர்ச்சையாக்க தேவையில்லை. இந்து மதவாதத்தை வைத்து தமிழ்த் தேசியத்தை உடைப்பதற்கு சதித்திட்டம் உள்ளது.

தமிழ் அரசு கட்சி தலைவர் தொடர்பில் குழப்பம் உள்ளது. மாவை தமிழரசுக் கட்சியை சரியாக வழிநடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

அமெரிக்கா சென்ற கட்சியினரால் நல்லது நடந்தால் சிறப்பு. தமிழ்த் தேசிய உணர்வுள்ள தேர்தல் அரசியல் சாராதவர்கள் ஒற்றுமை முயற்சியில் ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

300 போராட்டங்கள் நடத்தியேனும் அரசாங்கத்தை மாற்றி அமைப்போம்! சஜித் தெரிவிப்பு

Leave a Reply