பருத்தித்துறையில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி!

வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பருத்தித்துறை, சாரையடி பகுதியில் நேற்று இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எதிர் எதிரே பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் தெல்லிப்பளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Leave a Reply