இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் இடை நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில், இதற்கு முன்னர் முதலாம் வகுப்பு தொடக்கம் 5ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கும், 10ஆம் வகுப்பு தொடக்கம் உயர்தரம் வரையான மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, தரம் 6 முதல் 9 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்றுமுதல் பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பாடசாலைக்கு வருகை தருவதை அவதானிக்க முடிந்தது.










