தனியார் பேருந்து ஒன்றின் நடத்துநர் மீது கடும் தாக்குதல்- யாழில் சம்பவம்

<!–

தனியார் பேருந்து ஒன்றின் நடத்துநர் மீது கடும் தாக்குதல்- யாழில் சம்பவம் – Athavan News

யாழ்ப்பாணம்- காரைநகர் பயணிகள் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்துவொன்று சங்கானையில் வழிமறிக்கப்பட்டு நடத்துநர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த தாக்குதலில் கு.நியூட்டன் என்ற நடத்துநர் உள் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சாரதி ஒருவரின் ஒழுங்கீனம் காரணமாக அவரை மேற்படி தனியார் பேருந்து சங்கம் சேவையில் இருந்து இடைநிறுத்தியது எனவும் அதன் பின்னணியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Leave a Reply