
பாகிஸ்தானில் ஒருபுறம் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் மறுபுறம் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளஇடரில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 545 ஆக உயர்வடைந்துள்ளது என அந்தநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் வரலாறு காணாதளவில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் கனமழை பெய்து வருகின்றது.இதனால் நாட்டின் மொத்தப் பரப்பில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் வெள்ளஇடரால் 16 சிறுவர்கள் உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி கடந்த ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை வெள்ள இடரால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 545 ஆக உயர்வடைந்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.





