மோ. சைக்கிள்– டிப்பர் விபத்து: எவருக்கும் காயமில்லை

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் மோதியதில் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஆயினும் சம்பவத்தின்போது தெய்வாதீனமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தோருக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை சந்தியில் நேற்று  இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் டிப்பர் சாரதியைக் கைதுசெய்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply