பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைகுண்டுடன் கைது!

கொழும்பு தெமட்டகொட பகுதியில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆராயமய வீதி பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது அவரால் கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 125 கையடயக்கத்தொலைபேசிகள், 10 மடிக்கணினிகள், இசைக்கருவிகள், 520 கைகடிகாரங்கள் , 3 தொலைக்காட்சிகள் என்பவற்றோடு , குறித்த வீட்டில் இருந்த கைக்குண்டு ஒன்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

பிற செய்திகள்

Leave a Reply