கோட்டாவுக்கு பிரதமர் பதவி?

கொழும்பு, செப் 19

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை நாட்டின் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குறித்த கட்சியின் பிரிதொரு குழு தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறி வருவதாக அறியமுடிகிறது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடப் போவதில்லை எனவும், மீண்டும் அரசியலில் பிரவேசிப்பது தொடர்பில் அவர் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *