<!–
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த எட்டு இந்திய மீனவர்களையுமே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ் மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


