இனிப்பு உணவுகளின் விலை குறைவடைகின்றது

இனிப்பு உணவுப் பொருள்களின் விலைகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 10 – 13 வீதத்தால் குறைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என இலங்கை இனிப்பு உணவுப்பொருள்களின் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் சங்க தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார தெரிவிக்கையில்

இரண்டு முக்கியமான மூலப்பொருள்களுக்கான செலவுகள் குறைந்துள்ளமையாலேயே சந்தையில் இனிப்பொருள்களின் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனிப்பு உணவுப் பொருள்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சீனி கிலோ 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை மற்றும் காய்கறி எண்ணெண்யின் விலையும் 250 ரூபாவால் குறைக்கப்பட்டமையை அடுத்து இனிப்புப் பொருள்களுக்கான விலைகள் குறைக்கப்படுகின்றன– என்றார்.

Leave a Reply