நாடாளுமன்றின் மாதாந்த மின்கட்டணம் ரூ. 60 லட்சம்!

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இன்று (20) தெரிவித்துள்ளார்.

நாடா­ளு­மன்­றம் இன்று முற்­ப­கல் 9.30 மணிக்கு சபா­நா­ய­கர் மஹிந்த யாப்பா அபே­வர்த்தன தலை­மை­யில் கூடி­யது.

இதன்போது நாடாளுமன்றின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளது, அதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் பெறும் முறை தயாரிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பதிலளித்த மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நாடாளுமன்றத்தில் 60 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்துவது அவசியமானது.

அதற்கான பணத்தை தமது அமைச்சு வழங்க முடியாது எனவும், தேவைப்பட்டால் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply