கற்பிட்டியில் சுற்றாடல் முன்னோடி மாணவர்கள் 11 பேருக்கு ஜனாதிபதி விருது

கற்பிட்டி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அல் அக்‌ஷா தேசிய பாடசாலை மற்றும் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் சுற்றாடல் முன்னோடி மாணவர்கள் 11 பேர் ஜனாதிபதி விருதுக்கு தெரிவகியுள்ளனர்.

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணவர்களுக்கான நேர்முக தேர்வின் போதே குறித்த மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இருந்து 6 மாணவர்களுமர, பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து 5 மாணவர்களுமாக 11 மாணவர்கள் ஜனாதிபதி விருது பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

தேசிய ரீதியிலான இப்போட்டியில் புத்தளம் மாவட்டத்தில் இவ்விரு பாடசாலை மாணவர்கள் மாத்திரமே தெரிவாகியுள்ளனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவினால் அடுத்த மாதம் அளவில் பதக்கம் அணிவித்து கெளரவிக்கப்படவுள்ளதாக புத்தளம் வலய சுற்றாடல் மின்னோடி ஆணையாளர் பாறூக் பதீன் ஆசிரியர் தெரிவித்தார்.

Leave a Reply