மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து ஜனாதிபதி ஆராய்வு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து இலங்கை ஆராய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக எதிர்கொள்ளும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக, வாகனங்களை இறக்குமதி செய்வது 2020 முதல் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் பெரும்பாலானவை வாகனங்களுக்காகவே பயன்படுத்தப்படுவதாகக் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஏற்றுமதி வருவாயில் 35% எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்ததோடு நாட்டில் 71% எரிபொருள் வாகனங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க சக்தியினால் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து இலங்கை அவதானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாட்டிற்கு இவ்வாறான தீர்வுகளை முன்வைப்பதற்காகவே அவர் தனது பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மீது அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாக மேலும் தெரிவித்தார்.

Leave a Reply