பாடசாலைகளில் உணவு வங்கி அமைக்கும் நிலை-சபையில் டளஸ் கவலை!

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கருத்து தெரிவிக்கையில்:

இங்கே வந்து விவாதம் செய்து எந்தப் பலனும் இல்லை.

நாட்டில் கடந்த 2 வருடங்களாக 11 லட்சம் மாணவர்கள் மதிய உணவு இன்மையால் தவிக்கின்றனர்.

இப்போது பாடசாலையில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா.பல பாடசாலைகளில் சிறிய உணவு வங்கிகள் அமைக்கப்படுகின்றன.

அதிலே அதிகமாக மேலதிமாக உணவு கொண்டு செல்லும் மாணவர்களின் உணவை கடன் வாங்கி ,மற்ற மாணவருக்கு கொடுக்கும் நிலை ஏற்படுகிறது.அதே போன்று பெற்றோர்கள் உணவை பரிமாறி வருகின்றனர்.இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply