
கடந்த 20,21ம் திகதிகளில் யாழ் மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால், மாநகரசபைக்கு உட்பட்ட பலசரக்கு கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது வண்ணார்பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் 10 பலசரக்கு கடைகளில் திகதி காலாவதியான பொருட்கள் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் ஓர் கடையில் திகதி காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மேற்படி கடை உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கினை விசாரித்த நீதவான் 11 கடை உரிமையாளர்களிற்கும் மொத்தமாக 185,000/= தண்டப்பணம் அறவிட்டு தீர்ப்பளித்தார்.
பிற செய்திகள்





