
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் தோன்றியுள்ள சிக்கல்களைத் தீர்த்து சுதந்திரமா னதும் பக்கசார்ப்பற்றதுமான நிர் வாக சபைத் தேர்தலை நடத்துவ தற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார் .
இலங்கையின் காற்பந்து சம் மேளனம் மீது , சர்வதேச காற் பந்து சங்கங்களின் சம்மேளனத்தினால் தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக , இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலை வர் ஜஸ்வார் உமார் தெரிவித்திருந்த நிலையிலேயே , அவ்வா றான நிலை ஏதும் ஏற்படாத வகையில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க புதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளார் .
இதற்காக உயர்நீதிமன்ற ஓய் வுநிலை நீதிபதிகள் மூவரைக் கொண்ட இயல் பாக்குதல் குழு ( சுயாதீன நிர்வாகக் குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் .
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிர்வாக சபையின் காலம் நிறைவடைந்துள்ளதால் அதன் நிர்வாக செயற்பாடுகளை கவனிப்பதற்கென இந்தக் குழு அமைக்கப்பட்ட பின்னர் இலங்கை கால்பந்தில் சம்மேளனத்தின் யாப்பில் பீபா வினதும் விளையாட்டுத்துறை அமைச்சினதும் விதிகளுக்கு இணங்க திருத்தங்கள் செய்யப் பட்டு நிர்வாக சபைத் தேர்தல் 70 தினங்களில் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார் .
இதையடுத்து இலங்கை கால் பந்தாட்ட சம்மேளன ஊழியர் களின் சம்பளம் , 17 வயதுக் குட்பட்ட இலங்கை அணியின் வெளிநாட்டுப் பயணம் ஆகி யவற்றுக்கு இயல்பாக்கல் குழு தீர்வு காணும் எனவும் அமைச்சர் தெரிவித்தார் .
இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத்தில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக கடந்த காலங்களில் முறைப்பா டுகள் செய்யப்பட்டபோதிலும் விசாரணைகள் முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் தற்போது தாக்கல் செய் யப்பட்டுள்ள முறைப்பாடும் கிடப்பில் போடப்படுமா ? என அமைச்சரிடம் கேட்டபோது , இத்தகைய முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி நிதி முறைகேடுகள் இடம்பெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கவேண்டும் அதில் இரண்டு பேச்சுக்கு இட மில்லை . அதற்கு நியமிக்கப்படும் விசாரணை அதிகாரிகளும் பொறுப்புடன் ஒத்துழைக்க வேண்டும் .
மேலும் முறைப்பாடுகளை மூடி மறைக்காமல் தவறுகள் தொடர்ந்து இடம்பெறாமல் தடுப்பதற்கு அதிகாரிகள் வழி செய்யவேண்டும் என பதிலளித்தார் .
இதேவேளை , உலக கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை . வலைபந்தாட்ட அணியினருக்கு பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு வசதிகள் செய்துகொடுப்பீர்களா என அமைச்சரிடம் கேட்டபோது ,
நிச்சயமாக . சுகததாச உள்ளக அரங்கில் வலைப்பந்தாட்ட அணியினர் பயிற்சிகளில் ஈடுப டுவதற்கும் சுகததாச ஸ்போர்ட்ஸ் ஹோட்டலில் வீராங்கனைகள் தங்குவதற்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய் துகொடுக்கப்படும் . அத்துடன் உள்ளக அரங்கை பயன்படுத்துவதற்கு விளையாட்டுத்துறை நிதியிலிருந்து பணம் வழங்கப்படும் ‘ என்றார்.





