தர்ஷன் தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் அஞ்சலி

கொழும்பு,ஒக் 03

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் தமது 41ஆவது வயதில் நேற்று முன்தினம் இரவு காலமானார். இந்நிலையில் அவரது பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(03) அஞ்சலி செலுத்தினார்.

அவரின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடல் கொழும்பிலிருந்து இன்று மாலை இரத்தினபுரி – இறக்குவானைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

இறக்குவானை – கொட்டலை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில், நாளை மறுதினம் வரை பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதையடுத்து, நாளை மறுதினம் பிற்பகல் 3 மணியளவில் இறுதிக் கிரியை இடம்பெற்று, இறக்குவானை பொது மைதானத்தில் மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர், திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply