22ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அறிவுறுத்து

நாடாளுமன்றத்தில் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்ற குழுவுடன் கலந்துரையாடி அது குறித்த ஆராய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதன்போது, அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன்போதே, தற்போதைய நிலையில், அரசியலமைப்பு சீர்த்திருத்தம் அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply