சட்டவிரோத பொருட்களுடன் ஒருவர் வவுனியாவில் கைது!

<!–

சட்டவிரோத பொருட்களுடன் ஒருவர் வவுனியாவில் கைது! – Athavan News

வவுனியா ஈரட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஈரற்பெரியகுளம் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து வத்தளைக்கு பயணம் செய்த கூளர்ரக ஹென்டர் வாகனத்தை நேற்று (திங்கட்கிழமை)மாலை 6 மணியளவில் ஈரட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட பொலிஸார் குறித்த வாகனத்தில் இருந்து 3800கிலோ மஞ்சள் மற்றும் 250மில்லிலீற்றர் விவசாய கிருமிநாசினி மருந்து போத்தல் 519 என்பவற்றை சட்டவிரோதமாக கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஈரட்டை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சட்டவிரோதமான பொருட்களை கொண்டு சென்ற நீர்கொழும்பை சேர்ந்த 43 வயது நபரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0750718243


Leave a Reply