பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் அதிகமான ஹோர்மோன் மாற்றங்கள் நடக்கின்றன. அதனால் அவர்களின் உடலிலும் மனத்திலும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் சில வாந்தி வருவது, கை கால் வலிப்பது, முதுகுவலிப்பது போன்றது. இதில் மிகவும் பெண்களை வாட்டி வதைக்கிறது இந்த முதுகுவலி.
வயிற்றில் எடை கூடுவதால் முதுகுவலி ஏற்படுகிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் முதுகு வளைகிறது. அதனாலும் இது போன்ற முதுகு வலி ஏற்படுகிறது. மேலும் கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.
வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம். மேலும், கர்ப்ப காலத்தின்போது Relaxin என்ற ஹார்மோன் சுரப்பதாலும் முதுகு இடுப்பு தசைகள் மற்றும் ஜவ்வுகள் வலுவிழந்து வலி உண்டாகிறது. வயிறு பெரிதாக ஆக, கீழ் முதுகின் எலும்பு முன்னோக்கி வளைகிறது. இவையெல்லாம் பொதுவாக அவர்களுக்கு முதுகுவலி வருவதற்கு காரணமாக இருக்கின்றது.
அதுமட்டுமின்றி ளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம். இதற்கு தனியாக செய்வது என்று ஒன்றும் கிடையாது. கற்பமானால் கண்டிப்பாக கரு வளரக்கூடும். அதுபோன்று வளரும் போது இது போன்று இடை அதிகரிப்பு ஏற்படும்.
இந்த எடை அதிகரிப்பால், இது போன்ற பிரச்சனைகள் வருவது சகஜம். இதற்கு முதலில் சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். அதற்காகவே கர்ப்பிணிகளுக்கு நிறைய சத்தான உணவுகளை சாப்பிட வலியுறுத்துகின்றனர்.
ஆனால் இதனை சரிசெய்ய உங்களின் உட்காரும் பொசிஷன் அதனை சரி செய்துகொள்ள வேண்டும். எப்போதும் ஒன்று அல்லது இரண்டு தலைகாணி அதனை முட்டுக்கொடுத்து உட்கார வேண்டும். இதுபோன்று செய்தால் முதுகிற்கு இதமாக இருக்கும். மேலும் பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான பொசிஷன்.
உட்கார்ந்து இருக்கும்போது டவலை நான்காக மடித்து முதுகுக்கு பின் வைத்து உட்காருவதன்மூலம் முதுகுக்கு ஏற்படும் அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம்.
ஏதேனும் பொருளை கீழே இருந்து எடுக்க நினைத்தால் எப்போதும் போல சாதாரணமாக குனிந்துவிடாதீர்கள். அது முதுகிற்கு அதிக அழுத்தத்தை கொடுத்து உங்களின் வழியை மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம். இதற்காக தான் மருத்துவர்கள் கர்ப்பிணிகளை வாக்கிங் செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். எந்த அளவிற்கு கர்ப்பிணி பெண்கள் நடக்கின்றனரோ அந்த அளவிற்கு அது அவர்களுக்கு நல்லது.
மேலும் அடிக்கடி தைலம் தேய்ப்பது, மிகவும் மெதுவாக அதிக அழுத்தம் கொடுக்காமல் மாஸ்ஸாஜ் செய்வது போன்றவற்றை செய்தாலும் உங்களின் முதுகு வலி ஓரளவு குறையும்.
பிற செய்திகள்