மாகாண பிரதம செயலாளராக கடமையை பொறுப்பேற்ற ரத்நாயக்க!

கிழக்கு மாகாண புதிய பிரதமச் செயலாளராக எஸ் .ரத்நாயக்க நேற்று (03) திருகோணமலையில் உள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

முன்னர் பிரதம செயலாளராக கடமையாற்றிய துசித பி.வனிகசிங்க ஓய்வு பெற்ற பின்னர் இருந்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டார்.

ரத்நாயக்க பிரதம செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றினார்.

நிர்வாக சேவையில் 27 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளை வகித்த திரு. ரத்நாயக்க, கந்தகெட்டிய, ஹகுரன்கெத்த, மத்திய மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் அதே மாகாண பிரதம அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply