பிரிவெனா கல்வி தொடர்பில் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண பிரிவேனா விழா திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத் மற்றும் பிரிவேனா இராஜாங்க அமைச்சர் விஜித பெய்ருகொட தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

“ஒரு பலனளிக்கும் உற்பத்தித்திறன்” என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள பல விடயங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.புதிய பிரிவேனா மதிப்பீட்டு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் பிரிவேனில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் பிரிவேனா உற்பத்தித் தரச் சுட்டெண்ணை இலக்காகக் கொண்டு 29 பிரிவேனாக்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டன.
இம்மாகாணத்தில் உள்ள பிரிவேனா மற்றும் தம்ம பாடசாலைகள் பல கடினமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து பிள்ளைகளுக்கு பிரிவெனா கல்வியை வழங்குவதற்கும் பிக்குகளின் கல்விக்காகவும் கடுமையாக உழைத்து வருகின்றன.

இந்த செயல்முறையின் படி, 80 புள்ளிகளுக்கு மேல் சிறந்த பிரிவில் அந்த தரத்தைப் பெற்ற ஒரு மாணவர் இருந்தார்.அதுமட்டுமன்றி 70=79 புள்ளிகள் கொண்ட இரண்டு பிரிவேனாக்களும் மாகாணத்திலிருந்து மிகச் சிறந்த மட்டத்தில் இருப்பது விசேட அம்சமாகும்.

பிற செய்திகள்

Leave a Reply