
பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்ட வேண்டும் என மக்கள் மறுமலர்ச்சி முன்னனி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆறுமாதகாலமென்ற உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்தை 1974 ஆம் ஆண்டிலிருந்து சுமார் காலங்களுக்காக கொண்டுவரப்பட்ட தொடச்சியாக ஆட்சிசெய்த அனைத்து அரசியல் தலைவர்களும் நீக்குவதற்கு முன்வரவில்லை . அவர்களுக்கு துணிவும் இருந்திருக்கவில்லை .
தற்போதுள்ள இந்தப் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக தேசிய பாதுகாப்புச் சட்டமென்ற அடிப்படையில் புதிய சட்டம் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அழித்திருக்கின்றது .
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான சட்டமும் அதன் விதந்துரைகளும் சட்டிக்குள்ளிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாக மாறுமா ? இல்லை அச்சட்டம் உண்மையிலேயே சர்வதேச சட்ட நியாயாதிக்கத்திற்கேற்ப அமையுமா ? எதிர்காலத்திலேயே அறிந்து கொள்ள முடியும் .
சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக இந்நாட்டில் நடைமுறையிலிருக்கும் இத்தகைய கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி பரவலாக பலதரப்பட்ட கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் சில அரசியல் கட்சிகள் , சிவில்அமைப்புக்கள் ஈடுபட்டுவருவதை மக்கள் மறுமலர்ச்சி முன்னனி வரவேற்பதுடன் தானும் கை கோர்த்துக் கொள்கின்றது .
இந்தப் பயங்கரவாதச் தடை சட்டம் உண்மையில் ஆயுதப் போராட்டத்தை ஒழிப்பதற்கு கொண்டு வரப்பட்டதாகும் . இது இன்று இந்நாட்டின் அனைத்து தரப்பினரையும் அதாவது முஸ்லிம் , சிங்கள மக்கள் மீதும் பாய்ந்து காவு கொண்டுள்ளது .
ஒரு ஜனநாயகம் மேலோங்கியிருக்கும் ஒரு ஆட்சியில் பயங்கரவாத தடைச்சட்டம் , என்ற ஓர் சட்டத்தின் அவசியம் என்ன இருக்கின்றது ? இச்சட்டம் நான்கு தசாப்தத்திற்கு மேலாக இச் சட்டம் நம் நாட்டில் தொடர்ந்து இருந்து வருகிறது என்றால் , இது மக்களின் தவறா ? அல்லது இந்த நாட்டை ஆட்சிசெய்த ஆட்சியாளர்களின் தவறா ? இந்நாட்டு குடிமக்களாகிய சிங்கள , தமிழ் , முஸ்லிம் மக்களுடைய நியாமமான கோரிக்கைகளை ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்கள் பூர்த்தி செய்யத் தவறியதாலேயே அரசாங்கங்களுக்கெதிராக கிளர்ச்சிகள் உருவாகின .
அதனை அடக்கவே இந்த பயங்கரவாத சட்டம் பாவிக்கப்பட்டு வந்தது . இன்றும் பாவிக்கப்படுகின்றது . இது அரசுகளின் ஜனநாயக விரோத மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளாகும் . இவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் .
பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும் . மாற்றீடாக கொண்டுவரப்படவுள்ள சட்டமும் உள்நாடு சர்வதேச நீதி நியாய ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் மதிக்கக் கூடிய வகையில் இச்சட்டங்கள் அமைய வேண்டும் என்றுள்ளது.
பிற செய்திகள்





