கடும் மழையுடனான வானிலை தற்காலிகமாக குறைவடையும்- வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் மழையுடனான வானிலை இன்று அல்லது எதிர்வரும் சில தினங்களில் தற்காலிகமாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடனாக மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

Leave a Reply