
சீனாவிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தாய்வான் அதன் கடற்படை பலத்தை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக போர்க்கப்பல் ஒன்றை படையில் இணைத்துள்ளது.
இந்த ஈரூடக போர்க்கப்பல் தாய்வானின் உள்நாட்டு தயாரிப்பு என்பதால் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த கப்பல் 11 ஆயிரம் டன் எடை கொண்டது என்பதால், இது தீவுகளுக்கு இடையே பெருமளவு வீரர்களை ஒரு சமயத்தில் ஏற்றிச் செல்வதற்கு உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் ஈரூடக செயற்பாட்டிற்கு உரியது என குறிப்பிடப்படுவதற்குக் காரணம், இவை படைகளுக்கும் ஆயுதம் வழங்குவதற்கும் போர் சந்தர்ப்பத்தில் ஆதரவு வழங்குவதற்கும் பயன்படுத்தப்பட கூடியதாக இருக்கும் என்பதாலேயே என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு இவ்வாறான கப்பல் ஒன்று தாய்வானில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் தடவை. தாய்வான் ராணுவத்தை நவீனமயமாக்கம் திட்டத்திற்கு கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தாய்வான் பெருமையுடன் கூறியுள்ளது.
பிற செய்திகள்





