ஏற்றுமதி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா செய்கைக்கு அனுமதி வழங் கப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார் .
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது .
கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் ஏதேனும் கலந்துரையாடப்பட்டதா எனவும் , கஞ்சா வளர்ப்பு குறித்து தங்களின் தனிப்பட்ட கருத்து என்னவெனவும் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார் .
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
பொருளாதார மேம்பாட்டுக்காக ஏற்றுமதி மற்றும் மருத்துவ தேவைக்காகவும் . விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் கஞ்சா வளர்க்க அனுமதி வழங்க வேண் டும் என அன்று முதல் சுட்டிக்காட்டி வருகின்றேன் இதனால் விமர்சனத்துக்கும் உள்ளானேன் .
அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டு டுள்ள நிலையில் , போதைக்காக அல்லா மல் , ஏற்றுமதிக்காக அனுமதி வழங்கு வது ஏற்புடைய நடவடிக்கை . இது தொடர் பில் கருத்தாடல்கள் இடம்பெறவேண்டும் .
ஏற்றுமதிக்காக கஞ்சா வளர்ப்பது குறித்து துறைசார் அமைச்சர் , சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளார் ’ – என்றார் .
பிற செய்திகள்