
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்துள்ளார்.
அவரது விலகலினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ம.ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் தேசிய பேரவையில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.





