1970 களில் சிங்கப்பூர் பிரதமராக இருந்த லீ குவான்-யே,இலங்கை போல் சிங்கப்பூர் மாற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த சூழ்நிலையில் 1972 க்கு பின்னர் பாரிய உலகம் சார் பொருளாதார நிலைமையை அன்றைய ஜனாதிபதி ஜெ.ஆர் ஜெயவர்த்தன ஏற்படுத்தி இருந்தாலும் கூட இலங்கையில் இருந்த இன வெறியினால் இனப்பிரச்சனை தீர்க்கப்படாத காரணத்தினால் மீண்டும் மீண்டும் இனப்படுகொலைகள் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் மிகவும் வீழ்ச்சியடைந்து சின்னாபின்னமாக போய் இப்போது சிங்கப்பூரினை முன்னுதாரணமாக கொள்ளலாமா? என்ற இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எண்ணுகின்ற அளவிற்கு நிலைமைகள் மிக மோசமடைந்திருக்குகின்றன என முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் சிங்கப்பூரிடம் உறவு வைக்க வேண்டுமென்றால் ,சிங்கப்பூரும் ,மலேசியாவும் இரண்டு நாடுகளாக சமாதானமாக பிரிந்தது. அங்கு பல்வேறு தேசிய இனங்கள் வாழ்ந்தாலும் ,தமிழ் மொழி உட்பட பல மொழிகளுக்கு அங்கு அரச மொழிகளாக வழங்கப்பட்டிருக்கின்றன.இந்த சுமூகமான நிலைமை ஒரு தேசிய நல்லிணக்கத்தை இலங்கையில் கட்டியெழுப்பாத வரை அதனை எதிர்பார்க்க முடியாது.
நாட்டில் தொடர்ச்சியாக ஜனாதிபதி,பிரதமர் ஆகியோருக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மே 9 ஆம் திகதி உச்சகட்டத்தினை அடைந்து கோட்டாபய ராஜபக்ஷ நாட்டினை விட்டு தப்பி ஓடியதும் ,மகிந்த பதவி விலகியதும் ஒரு விடயமாகும்.
மஹிந்த ,கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் அணிகள் இந்த அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை தொடுத்ததன் காரணமாக வன்முறைகள் வெடித்தன. பலருடைய வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
தற்போது அமைதி வழி போராடியவர்களையும் அதற்கு தலைமைதாங்கியவர்களையும் பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களில் தடுத்து வைப்பதும் ,தொடர்ந்து தேடுதல் நடாத்தப்பட்டு வேட்டையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் மீது சட்டம் பாய்கிறது.ஒரு தலை பட்ஷமாக விசாரணை நடத்தப்பட்டோ அல்லது தடுத்து வைக்கப்படாது ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.
இன்றைக்கு சர்வதேச அரங்கிலும் ,ஐ.நா மனித உரிமை பேரவையிலும் இந்த பிரச்சனைகள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.எவ்வாறு தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் ஒரு பாகுபாட்டினை காட்டி இவர்கள் தொடர்ந்து தங்களுக்கு சார்பு உள்ளவர்கள் ,சார்பு அற்றவர்கள் என்ற அடிப்படையில் கொடூரமான தேடுதல் வேடடைகளும் ,விசாரணைகளும் அரங்கேறிக்கொண்டிருப்பது நாட்டினை ஒரு சுமூகமான நிலைமைக்கு ஒரு போதும் நல்லிணக்கத்துக்கு வழி வகுக்காது என்பது தான் எங்களுடைய திட்டவட்டமான கருத்து .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை பிரச்சினை சம்மந்தமாக இணை அனுசரணை வழங்கும் நாடுகள் ஒரு தீர்மானத்தினை முன்மொழிந்து பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தி வருகின்ற நிலைமையில் தற்போது முதல் தடவையாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவுகள்,குழப்பங்கள் என்ற விடயத்தில் மோசடிகள் ,ஊழல்கள் போன்ற பல விடயங்களுக்கு ஒரு சர்வதேச ரீதியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தில் சொல்லப்பட்டிருப்பது ஒரு சிலர் மத்தியில் கேள்விகளை எழுப்பப்பட்டிருக்கின்றன.
ஊழலிலே சம்பந்தப்பட்டவர்களை தவிர வேறு ஒருவரையும் பாதிக்காது .இது இலங்கை அரசாங்கத்தினையோ அல்லது வேற யாரையுமே குற்றம் சாட்டுவதாக அமையாது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரையின் 51 ஆவது கூட்டத்தொடர் என்பது வாய்மொழியாக அறிக்கை விடக்கூடிய ஒரு கூட்டத்தொடர் .
52 ஆவது கூட்ட்த்தொடரிலே இறுதி அறிக்கையான எழுத்து மூலமான அறிக்கையினை வெளியிட வேண்டிய சூழ்நிலையிலே ,இதன் தொடர்ச்சியாக இலங்கை பிரச்சனையிலிருந்து இதன் தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படாமல் போகுமாக இருந்தால் இலங்கை இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும்.
உள்நாட்டு விசாரணை என்ற ஏமாற்று முயற்சியில் சர்வதேசம் ஒரு சரியான பதிலை வழங்க வேண்டும். வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் வெற்றியளிக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது என தெரிவித்தார்.
பிற செய்திகள்





