நாட்டின் விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்

இலங்கை விவசாயிகளைக் காப்பாற்றி நாட்டையும் காப்பாற்றுமாறு அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்புக்களின் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எமது நாடு மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் விவசாயிகளின் பிரச்சினை உள்ளது.இதில் எமது நாடு பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதற்கு காரணம் மிகப்பெரிய பெருச்சாலி கூட்டம் இந்த நாட்டை அரித்து,சூறையாடிய காரணத்தால் இந்த நாட்டு ,அரசு பாரிய பின்னடைவுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்த கொள்ளையடிப்புகள் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக இந்த ராஜ பக்ச கும்பல்,விவசாயத்தில் கை வைத்தது.இராசயன உரங்களை நிறுத்தி,இயற்கை உரங்களை பயன்படுத்துமாறு திடீரெனெ அரசு அறிவுறுத்தியதால் உள்நாட்டு விவசாயம் பாதிப்படைந்தது.

இதனால் மக்கள் போராடு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.2 ஆயிரம் ரூபா விற்பனை செய்யப்பட்ட உரம் ,கறுப்புச் சந்தையில் 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆகவே அனைவருக்கும் அரிசி முக்கியம் இதனை கருத்தில் கொண்டு,உர இறக்குமதி மற்றும் விநியோகத்தை உடனடியாக மேற்கொள்ளுமாறும்.

மண்ணெண்ணெய் டீசல் போன்ற எரிபொருட்களை மானிய அடிப்படையில் விவசாயிகளும் தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply