
யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுவதாக மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.மதத்தலைவர்களும் ஒரு வலுவான கவலையினையும் தெரிவித்து வருகிறார்கள்.முழத்துக்கு முழம் படை முகாம்கள் ,புலனாய்வுப் பிரிவினர் கால்களுக்குள் தடுப்படுகின்ற நிலையில் அவர்களையும் மீறி இந்த கடத்தல் இடம்பெறுகிறதா?கேள்விக்குரிய ஒன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன் என அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் சமூகத்துக்கென்று ஒழுக்க விழுமியங்கள் இருக்கின்றன.இந்த ஒழுக்க விழுமியங்கள் இல்லாத நிலைமையில் தான் இந்த மாதிரியான மோசமான செயற்பாடுகள் இடம்பெறுவதாக நாங்கள் கருத வேண்டி இருக்கின்றது.
இதற்கு பின்னால் புலனாய்வுப் பிரிவினரின் பங்கு இருக்கலாம் என்ற அபிப்பிராயம் தமிழ் மக்கள் இடையே பேசப்படுகின்றது.திட்டமிட்டு எங்கள் இளைஞர்களை சிதைக்கின்றார்கள்.
அரசியல் தலைவர்கள் ,மதத்தலைவர்கள் ,சட்டத் துறையினை சேர்ந்தவர்கள் அனைவரும் இணைந்து ஒரு கூட்டு செயற்பாட்டின் மூலம் இதனை இல்லாது செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
குறிப்பாக கிராமங்களில் இது தொடர்பாக விழிப்புணர்வுகளை கொண்டு வரலாமா? என்று யோசிப்பது நன்று.புகழ் பெற்ற பாடசாலைகளில் கூட போதைப்பொருள் பாவனை இருப்பதாக பேசப்படுகிறது.
எனவே முதற்கட்டமாக ஆசிரியர்களும்,பெற்றோர்களும்,மதத்தலைவர்களும் இணைந்து ஒரு கூட்டு செயற்பாட்டினை முன்னெடுப்பதன் ஊடாக விழிப்புணர்வினை கொண்டு வந்து ஓரளவுக்கேனும் தடுக்க இயலுமா?என்று யோசிப்பது நன்று என தெரிவித்தார்.
பிற செய்திகள்





