
நாடு பொருளாதாரத்தில் மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டு வருகின்ற சூழ்நிலையில் தமது நடவடிக்கைளை சீனா இரகசியமாக நடத்துவதற்கு முயற்சிக்கின்றது என ஜனநாயக போராளிகள் கட்சி கதிர் தெரிவித்தார்.
இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது ;
இலங்கையானது சீனாவுடன் சேர்ந்து தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.பணத்தினை கொடுத்து எங்கள் எதிர்கால இளைஞர்களையோ ,மக்களையோ விலைக்கு வாங்கலாம் என்ற சிந்தனையையும் ,வேறு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதையும் இந்த அரசாங்கம் கைவிட வேண்டும்.
சீனாவின் ஆதிக்கம் என்பது மீண்டும் இலங்கையில் ஆரம்பித்திருக்கின்றது. அந்தவகையில் இலங்கை ,சீனா ஆகிய இரு நாடுகளுடைய கூட்டு சதி முயற்சியினால் ஈழத்தமிழர்களுடைய தேசியத்திற்கு பாதகமான விளைவுகள் எதிர்காலத்தில் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.கடந்த காலங்களில் சீனா ,இலங்கைக்கு பல உதவிகளை செய்திருந்தது.
இந்த உதவிகள் நல்லிணக்கத்துக்காக செய்யப்பட்ட உதவிகள் அல்ல. இலங்கையின் வளமிக்க பகுதிகளை ஆக்கிரமித்து தனது ஆடசி அதிகாரங்களை அதற்குள் தூவி இலங்கை ஒரு தன்னிறைவு பொருளாதாரம் அற்ற நாடாக ஆக்கும் நோக்குடனே கொண்டு வரப்பட்ட உதவிகளாகும்.
எம் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை சந்தித்த போது சீனா வெறுமனே கைகட்டி பார்த்துக்கொண்டிருந்தது.
இன்று நாடு பொருளாதாரத்தில் மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டுவருகின்ற சூழ்நிலையில் தமது நடவடிக்கைளை இரகசியமாக நடத்துவதற்கு முயற்சிக்கின்றது.
இந்த நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் இந்தியா தான் மிகப்பெரியளவிலான உதவிகளை இலங்கைக்கு செய்திருந்தது.
எரிபொருள் தட்டுப்பாடு இருந்த காலத்தில் எரிபொருள் நிலையங்களில் பல மோதல்கள் இடம்பெற்று இருக்கின்றன.
உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.இதனை இலங்கை சட்டத்தினால் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்பட்டது.
இந்தியாவின் உதவிகளின் பின்னர் தான் அவ்வாறான செயற்பாடுகள் குறைந்திருக்கின்றன.இந்த உதவிகளை இந்தியாவிடமிருந்து பெற்று விட்டு ,இலங்கையானது சீனாவுடன் சேர்ந்து எங்களின் நில ஆக்கிரமிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
அந்தவகையில் வட பகுதியில் உள்ள எங்களின் தாயக நிலங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றது.
அண்மையில் சீனாவின் வருகையினை எதிர்த்து போராடிய பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக சில மிலேச்சத்தனமான ,விரோத செயற்பாடுகளை சீனா செய்து வருகிறது.
அவர்களுக்கு பணத்தினை கொடுத்து எங்களின் தேசிய ஒற்றுமையினை சிதைக்கின்ற செயற்பாட்டில் இறங்கி இருக்கின்றது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
பணத்தினை கொடுத்து எங்கள் எதிர்கால இளைஞர்களையோ ,மக்களையோ விலைக்கு வாங்கலாம் என்ற சிந்தனையையும் ,வேறு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதையும் இந்த அரசாங்கம் கைவிட வேண்டும்.
சீனா உதவித் திட்டம் என்ற போர்வையிலே தேசிய இருப்புக்களை அழிப்பதற்கும்,வளங்களை சூறையாடுவதற்கும் இங்கு வருவதனை தடுகின்றோம்.
ஈழத்தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும்.என ஐ.நா வெளிப்படையாக கூறிய இந்தியாவிற்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இந்தியா எங்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றது. சீனா எங்களுக்கு எதிராக அங்கே செயற்பட்டிருக்கிறது.
பயங்கரவாதத்தினை வென்று இலங்கையை மீட்டெடுத்த இலங்கை அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கூறி தமிழர்களுக்கு எதிராக சீனா செயற்பட்டிருக்கிறது.மொழி,கலாசாரம் அடிப்படையில் எங்களுக்கும்,சீனாவுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை சீனாவிற்கு ஜனநாயகம் என்றால் என்ன ? என்பது தெரியாது.
தென்னிலங்கையில் ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் தங்களின் அராஜகர ஆட்சியினை தொடங்குவதற்கான திட்டங்களை மூடிய திரை மறைவில் முன்னெடுத்து வருகின்றது.
22 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்து அதனை கொண்டு வராமல் இருப்பதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர்.
சீனாவின் வருகையினை தமிழர்கள் என்றும் விரும்பவில்லை.இந்தியாவினுடைய அனுசரணையையும் ,உதவிகளையும் கோரி நிற்கின்றோம்.
இந்தியாவின் தேசிய நலம் சார்ந்த விடயங்களில் தமிழர்களாகிய நாங்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
இந்த நிலைப்பாட்டில் இருந்து விலகுவோமானால் சிங்கள தேசம் தமிழர்களாகிய எங்களை இந்த மண்ணில் இருந்து விரட்டி அடிக்கும் திட்டத்தில் வெற்றி பெறும்என்பதை கூறிக்கொள்கிறேன்.
சீனாவினுடைய உதவி திட்டம் என்பது தன்னுடைய நலம் சார்ந்து எம் எதிர்காலத்தலைவர்கள் ,தூண்களாக இருக்கும் மாணவர்களை சிதைக்கும் நடவடிக்கையாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.
அரசாங்கம் சார்ந்தவேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.அது முற்று முழுதாக தடுக்கப்பட வேண்டும்.என்றார்.
பிற செய்திகள்





