போதைப்பொருள் பாவனையினால் ஆபத்தினை எதிர்நோக்கும் இளைய சமுதாயம்- தனுஜன் கவலை!

எங்களுடைய சமூகத்தில் இன்று பெரிய உயிர் கொல்லி அரக்கனாக உருவெடுத்து நிற்கின்றது. சிறிய பாக்கு வெற்றிலை தொடக்கம் பாரிய ஹரோய்ன் வரைக்கும் எங்கள் மத்தியில் தாராளமாக விதைக்கப்படுகின்ற சூழல் அச்சுறுத்தலான நிலைமையிலே காணப்படுகிறது என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு செயற்பாட்டாளர்  ச.தனுஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பயன்படுத்துபவர்களை குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு எம் மத்தியில் போதைப்பொருள் வியாபாரம் ஒரு வியப்பாகவே நடக்கின்றன.

போதைப்பொருள் வரவு தங்கு தடையின்றி தாராளமாக எல்லைகளைத் தாண்டி சட்டவிரோதமாக ,சட்டத்தின் பலவீனத்துக்கூடாக வந்துகொண்டிருக்கிறது.இலங்கை முழுவதும் பரவலாக காணப்படுகின்றன.

வடக்குச்சூழல் மிகவும் ஆபத்தை எதிர்கொள்வதாக பலராலும் சொல்லப்படுகிறது.

இளம் வயதிலே உயிர் இழக்கின்ற வகையில், தங்களுடைய வாழ்க்கையினையே இழக்கின்றன வகையில் இளம் இளைஞர் ,யுவதிகள் போதைப்பொருள் பாவனையினால் மிகப்பெரிய ஆபத்தினை எதிர்நோக்குகிறார்கள்.

இதிலிருந்து மிகவும் அவதானமாக,கவனமாக எங்களுடைய குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நிற்கின்றோம். மிக முக்கியமாக போதைக்கு எதிரான சிந்தனையை குடும்பங்களுக்குள் விதைக்க வேண்டும்.

சின்ன சின்ன விடயங்களை அனுமதிப்பது பாரியளவில் மூளையினை மங்கச் செய்கின்ற போதைப்பொருள் பாவனையாக மாறியிருக்கின்றது.

கல்விச் சூழல்,கலாசார பண்பாட்டு மையங்கள் போன்றன இந்த விடயங்களை எதிர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்தமாக போதையினை எதிர்த்தல்,போதையினை நிராகரித்தல் என்பது பண்பாட்டின் அடையாளமாக வர வேண்டும்.எங்களின் சிந்தனையின் வேரில் இருந்த கிளம்ப வேண்டும்.

போதை அரக்கனை அழித்து ஒலிக்கும் வரையில் மாணவர்கள் ,இளைஞர்,யுவதிகள் ,எழுத்தாளர்கள் ,பெரியவர்கள் என அனைவரும் இந்த பிரசாரத்தில் கருவியாக பயன்பட வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரும் இதற்கு எதிராக அணிதிரள வேண்டும் .என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply